Tamil Motivational Story
ஒரு ஊரில் ஏழ்மையான குடும்பம் ஓன்று இருந்தது.அந்த குடும்பத்தில் மொத்தம் 5 நபர்கள்.அம்மா,அப்பா மற்றும் 3 குழந்தைகள்.அந்த 3 குழந்தைகளும் சிறு குழந்தைகள்.முதல் குழந்தைக்கு வயது 7,அடுத்த குழந்தைக்கு வயது 4,கடைசி குழந்தைக்கு வயது 2.
அப்போது ஒரு விபத்தில் அப்பா கால் இழந்துவிட்டார்.இனி அப்பாவால் வேலைக்கு சென்று உழைக்க முடியாது என மருத்துவர் கூறிவிட்டார்,
அம்மாவோ கூலி தொழிலாளி! இனி அம்மா வின் உழைப்பில் தான் குடும்பம் ஓட வேண்டும் என்ற சூழ்நிலை வந்தது.ஒரு வாரம் ஓடியது.அடுத்த வாரம் வீட்டில் அனைவரும் 2 வேளை தன சாப்பிட முடியும் என்ற நிலை வந்தது.அந்த அம்மா என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தார்.அப்பா மிக மன வருத்தத்துடன் இருந்தார் "நம் குழந்தை இப்படி பட்டினியாக இருக்கிறதே " என எண்ணி வருந்தினார் .மேலும் ஒரு வாரம் சென்றது,அப்போது அனைவரும் ஒருவேளை தான் சாப்பிட முடியும் என்ற நிலை வந்து விட்டது .பட்னியால் குடும்பம் வாட தொடங்கியது.அப்போது அப்பா யோசிக்க தொடங்கனார் .இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என எண்ணி யோசித்தார்.
"ஏன் நம்மால் உழைக்க முடியாது? நமக்கு ஒரு கால் தானே போய் விட்டது இன்னொரு கால் நன்றாக தான உள்ளது" என்ற கேள்வியை அவருக்குள்ளேய எழுப்பினர்.உட்கார்ந்து செய்யும் வேலை எதாவது பண்ணலாம் அல்லது ஒரு கம்பு வைத்து நின்று கொண்டாவது வேலை செய்ய்யலாம் என முடிவு செய்தார்.உடனே கையில் ஒரு கம்பு எடுத்து கொண்டு வேலை தேட தொடங்கினார்.ஒரு கால் இல்லை என்பதால் வேலை கிடைக்கவில்லை.
ஆனாலும் அவர் முயற்சியை கை விடவில்லை .விடாமல் வேலை தேடுவோம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வைத்திருந்தார்.அப்போது ஒரு சாலை வழியாக நடந்து சென்று கொண்டுருந்தார்.வழியில் ஒரு சினிமா திரையரங்கு ஓன்று ஓன்று இருந்தது.இங்கு கேட்டு பார்ப்போம் என வாடிய முகத்துடன் உள்ளே சென்றார்.அப்போது அங்கு இருந்த திரையரங்கு முதலாளி அவரை பார்த்து ,பெரியவரே? என கூப்பிட்டார்.அவர் திரும்பி பார்த்தார் . பின்பு அவருடைய கஷ்டத்தை கூறி ஒரு வேலை இருந்தால் கொடுங்கள் என கேட்டார்.திரையரங்கு முதலாளி அவருடைய வாடிய முகம்,முகத்தில் தெரிந்த பசி அனைத்தையும் பார்த்து புரிந்துகொண்டார் .பின்பு வேலையாள் ஒருவரை அழைத்து இவருக்கு இப்பொது சாப்பிட சாப்பாடு கொடுங்கள் என கூறினார். சாப்பிடுங்கள் ,உங்களுக்கு இங்கு டிக்கெட் கிழிக்கும் வேலையை தருகிறேன் என கூறினார்.பெரியவருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
சந்தோசமாக சாப்பிட்டார்.ஒரு சினிமா திரையரங்கில் டிக்கெட்கிழித்து கொடுக்கும் வேலை கிடைத்தது .உட்கார்ந்து இருந்து கொண்டு டிக்கெட் கிழித்து கொடுத்தால் போதும் என முதலாளி கூறிவிட்டார்.இதை முதலில் மனைவியிடம் கூற கூற வேண்டும் என வேகமாக நடக்க தொடங்கினர் .மனைவியிடம் நடந்ததை கூறினார் வேலை கிடைத்துள்ளது என கூறினார்.அண்ணல் மனைவிக்கு விருப்பம் இல்லை ,கணவன் கஷ்டப்பட வேணாம் என நினைத்து வெளிக்கு சேலை வேணாம் என கூறினாள் .அண்ணல் கணவன் கேட்கவில்லை . இரவு பகல் பார்க்காமல் அயராது உழைத்தார்.திரையரங்கில் உள்ள அணைத்து வேலைகளையும் கற்று விட்டார்.இப்பொது வீட்டில் பசி நீங்கியது.5 வருடம் கழித்து ஒரு திரையரங்கு ஆரம்பித்தார் முதலாளி ஆகிவிட்டார்.இப்பொது அந்த ஊரில் மிக பெரிய பணக்காரர் அவர்தான்.இது அனைத்தும் அவருடைய அயராது உழைப்பிற்கும்,அவர்,அவர் மீதுவைத்த நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு.அப்போது மருத்துவர் கூறியது போல "முடியாது" என வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தால் இன்று இவரால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது.உழைத்து வெற்றி பெற வேண்டும் என முடிவு எடுத்தார்,வெற்றி பெற்றார்.நாமும் இது போல் நம்பிக்கை வைத்து உழைத்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம்,வாழ்க்கையில் பல துன்பங்கள்,கஷ்டங்கள் வரும் எவன் ஒருவன் அதை எல்லாம் தண்டி செல்கிறானோ அவன் தான் வாழ்வில் வெற்றி பெறுவான் ."அயராது உழைப்போம் வெற்றி பெறுவோம்".
"தடையை உடைப்போம்! பல சரித்திரங்கள் படைப்போம்! "